ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் வசூலில் புதிய உச்சம்! - ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
திருச்சி:ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஜனவரி மாதம் உண்டியல் எண்ணும் பணி நேற்று (ஜன.25) நடைபெற்றது. அதில், மாதாந்திர உண்டியல்கள் மூலம் ஒரு கோடியே 46 லட்சத்து 45 ஆயிரத்து 100 ரூபாயும், ஸ்ரீவாரி உண்டியல் மூலம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 869 ரூபாயும், வைகுண்ட ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் மூலம் 5 லட்சத்து 14 ஆயிரத்து 664 ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 63 லட்சத்து 3 ஆயிரத்து 633 ரூபாயும், தங்கம் 185 கிராம், வெள்ளி 4,642 கிராம் மற்றும் 487 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. இந்த கோயிலில் இவ்வளவு பெரிய தொகை வசூலானது இதுவே முதன்முறை.