தமிழ்நாடு

tamil nadu

கார் டயர் வெடித்ததில் விபத்துக்குள்ளானது

ETV Bharat / videos

கார் டயர் வெடித்து இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்! - car accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 10:59 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்த கார் வேலூர் செண்பாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக காரின் முன் பக்க டயர் வெடித்துள்ளது. 

இதனால் நிலை தடுமாறிய கார் மேம்பால சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதற்கிடையில் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீதும் கார் மோதியதால் இரு சக்கர வாகனமும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த விபத்து காரணமாக மேம்பாலத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகப் போராடி போக்குவரத்தைச் சரி செய்தனர். மேலும், விபத்து குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details