நவராத்திரி பண்டிகை; தஞ்சை பெரிய கோயில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு காயத்ரி அலங்காரம்! - Gayatri decoration for goddess Periyanayaki
Published : Oct 19, 2023, 8:03 AM IST
தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படுவது ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் கோயில். மேலும் உலக பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோயிலுக்கு, உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
நவராத்திரி திருவிழா துவங்கி நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி திருவிழாவானது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல், இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த 15ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து தஞ்சை பெரிய கோயிலில் நான்காம் நாளாக நேற்று (அக்.18) நவராத்திரியை முன்னிட்டு, ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக காயத்ரி அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் நந்தி மண்டபத்தில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில், சிங்கப்பூர் சிவபிரிவினா குழுவினரின் பரதநாட்டிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி கொலுவைப் பார்க்க வந்த பக்தர்கள் பரதநாட்டிய நிகழ்வையும் கண்டு ரசித்தனர்.