ஆம்பூரில் களைகட்டும் நவராத்திரி திருவிழா.. வித விதமாய் கொலு வைத்து சிறப்பு வழிபாடு! - Navratri
Published : Oct 22, 2023, 10:19 PM IST
திருப்பத்தூர்:ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோயில், பிந்து மாதவர் சுவாமி கோயில் உட்பட பல்வேறு கோயில்களில், கொலு பொம்மைகள் வைத்து 9 நாட்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்று வருகிறது.
இதில், சந்திரயான் விண்ணில் ஏவப்படுவது போன்ற கொலு, பெருமாளின் 9 அவதாரங்கள் அடங்கிய கொலு, அம்மனின் அவதார கதைகளை பிரதிபலிக்கும் கொலு, திருமாலின் கல்யாண வைபவம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறும் கொலு பொம்மைகள் என வித விதமான கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டு, சிறப்புக் கூட்டு வழிபாடுகள் மற்றும் பஜனைகள் நடைபெற்று வருகிறது.
அதே போல கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பலரது வீடுகளிலும், கொலு பொம்மைகள் வித விதமாக அமைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மின் விளக்கு அலங்காரத்தில் ஒளிரும் இந்த கொலு பொம்மைகளை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், குழந்தைகளுடன் ஆர்வமாகக் கண்டு களித்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.