தமிழ்நாடு

tamil nadu

வத்தலகுண்டு கிராமத்து மாணவர்களால் உருவாக்கப்பட்ட நவராத்திரி சமத்துவ கொலு

ETV Bharat / videos

வத்தலகுண்டு கிராமத்து மாணவர்களால் உருவாக்கப்பட்ட நவராத்திரி சமத்துவ கொலு! - Navaratri

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 10:33 AM IST

திண்டுக்கல்: பழைய வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து நவராத்திரியை முன்னிட்டு சமத்துவ கொலுவினை உருவாக்கி உள்ளனர். பழைய வத்தலகுண்டு கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. நினைத்த காரியம் நடைபெறும் கோயிலாக அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. 

அந்த வகையில் நவராத்திரியை முன்னிட்டு, குட்டி கண்ணன் பயிற்சி மையம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 16ஆம் ஆண்டு நவராத்திரி கொலு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து 5,000 சிலைகளை அடுக்கி வைத்து கொலுவினை காட்சிப்படுத்தி உள்ளனர். 

இமயமலையை தத்ரூபமாக பஞ்சுகளைக் கொண்டு வடிவமைத்து, கைலாய மலையை உருவாக்கி நவராத்திரி கொலுவினை ரசிக்கும்படி வடிவமைத்து உள்ளனர். கிராமத்து மாணவர்களால் உருவாக்கப்பட்ட கொலுவில் பல அடுக்குகளில் விநாயகர், கிருஷ்ணர், பெருமாள், சிவன் வடிவில் என ஏராளமான சிலைகள் கொலுவாக அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கொலுவினை ரசித்து சாமி தரிசனம் செய்தனர். 

ABOUT THE AUTHOR

...view details