தமிழ்நாடு

tamil nadu

ம்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை

ETV Bharat / videos

நவராத்திரி; கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் சிறப்பு அபிஷேகம்! - tanjore news today

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 8:05 AM IST

தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகரில், மகாமகப் பெருவிழா தொடர்புடைய 12 சைவத்திருத்தலங்களில் ஒன்றான அமிர்தவள்ளி உடனுறை அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மகாமக திருவிழா நடைபெறும்.

இந்த கோயில் மகாமக திருக்குளத்தின் கிழக்கு கரையில்அமைந்துள்ளது. இங்கு மூலவர் சிவலிங்கம் அபிமுகம் மேற்கு முகம் நோக்கி அருட்பாலிப்பதால், இறைவன் அபிமுகேஸ்வரர் என போற்றப்படுகிறார். இத்தலத்தில் அபிநவராத்திரி பெருவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், நேற்று (அக்.16) உற்சவர் சுவாமிக்கு, பார்வதி தேவி சிவ பூஜை மேற்கொள்ளும் அலங்காரம் தத்ரூபமாக செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், இந்த கோயிலில் நூற்றாண்டு பழமையான பெரிய பெரிய பொம்மைகளை அழகியலோடு சீரமைத்து, ஆங்கிலேயர் ஆட்சி கால நீதிமன்ற காட்சி, ராஜராஜ சோழன் குதிரையில் நகர்வலம் காணச் செல்லும் காட்சி,

மதநல்லிணக்க குடும்பம், யசோதா கண்ணன், மகாபாரத காட்சி, சயன காட்சியில் கிருஷ்ணர் உடன் பாமா ருக்மணி, இந்திரசபை காட்சி, காளிங்க நர்த்தனம் என பல காட்சிகளை அற்புதமாக பொம்மைகளை வைத்து சிறப்பாக செய்திருந்தனர். 

ABOUT THE AUTHOR

...view details