வீடியோ: நஜிபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் யானையால் போக்குவரத்து பாதிப்பு - ராஜாஜி தேசிய பூங்காவில் காட்டுயானை
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ராஜாஜி தேசிய பூங்காவையொட்டி உள்ள நஜிபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானையால் இன்று (நவம்பர் 29) போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராஜாஜி தேசிய பூங்காவின் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் வெளியேறுவதும், இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் வாட்டிக்கையாகிவிட்டது. இதற்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகனவோட்டிகள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST