Annamalai padayatra: அண்ணே...ஸ்ட்ராங்கா ஒரு டீ... ஆர்டர் பண்ண அண்ணாமலை.. டீ போட்ட நயினார் நாகேந்திரன்! - thoothukudi
தூத்துக்குடி:தமிழகம் முழுவதும் பாஜக சார்பில், "என் மண்... என் மக்கள்" என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளுக்கும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு (ஆக 14) தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு யாத்திரையாக நடந்து சென்றனர்.
அப்போது திருச்செந்தூர் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே உள்ள டீக்கடையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டீ குடித்தார். இந்த சம்பவத்தின் போது, அவருடன் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ., சசிகலா புஷ்பா உடன் இருந்தனர். அப்போது மக்களை கவரும் வகையில், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ., டீக்கடையில் டீ போட்டார்.
அதைப் பார்த்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "அண்ணே ஸ்ட்ராங்கா டீ போடுங்க" என கேட்டார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ., டீ போட்டு கட்சியினருக்கு கொடுத்தார். அதனைப் பார்த்த அண்ணாமலை அண்ணனிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயம் உள்ளது என கிண்டல் செய்தார்.