தமிழ்நாடு

tamil nadu

ராணிப்பேட்டையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு

ETV Bharat / videos

ராணிப்பேட்டையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..! 47 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சி - Nagavedu School

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 7:37 AM IST

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த நாகவேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து தங்களது கடந்த கால பள்ளிப்பருவ நிகழ்வுகளை எண்ணி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இப்பள்ளியில் 1976 - 77ஆம் கல்வி ஆண்டில் பதினோராம் வகுப்பில் 52 மாணவ மாணவிகள் படித்தனர். இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 40 பேர், நாகவேடு கிராமத்தில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது முன்னாள் மாணவர்கள் தங்களின் முன்னாள் தலைமை ஆசிரியர் வரதராஜன் காலில் விழுந்து வணங்கினர். இதைத்தொடர்ந்து தங்களது குடும்பத்தினரை நண்பர்களிடம் அறிமுகம் செய்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

குறிப்பாக, 1976ஆம் ஆண்டில் பள்ளியில் எடுத்துக்கொண்ட குழு புகைப்படத்தை அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர். ஒரு சிலருக்கு கண்பார்வை மங்கலாக தெரிந்த நிலையில், புகைப்படத்தை செல்போனில் படம் பிடித்து அதைப் பெரிதாக்கி, பார்த்து ரசித்தனர். முன்னதாக மரணம் அடைந்த 12 மாணவ, மாணவிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். 

மேலும், நிகழ்ச்சியில் முன்னாள் கணித ஆசிரியர் ரத்தினம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details