கடலூர் அருகே இயங்காத தொழிற்சாலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! - நாகார்ஜுனா எண்ணை நிறுவனம்
கடலூர் அடுத்த பெரியகுப்பம் மற்றும் காயல்பட்டு பகுதியில் 1500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நாகார்ஜுனா என்ற எண்ணை தயாரிப்பு நிறுவனம் இயங்கி வந்தது. தற்போது அந்த தொழிற்சாலை பயன்பாட்டில் இல்லாத நிலையில் அதனுள் பல கோடி ரூபாய் மதிப்பிலான தளவாட பொருட்கள் இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் புகுந்து பொருட்களை கொள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ மளமளவென பரவியது. தொடர்ந்து கடலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST