கொடைக்கானலில் அவகோடா மரங்களில் மர்ம நோய் தாக்கம்! - dindigul
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதியில் விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. இங்கு பல்வேறு காய்கறிகள் மட்டுமின்றி பழ வகைகளும் விவசாயம் செய்து வருகின்றனர். தொடர்ந்து கீழ் மலை கிராமங்களான வில்பட்டி, பள்ளங்கி, புலியூர், பண்ணைக்காடு மற்றும் தாண்டிக்குடி உள்ளிட்ட இடங்களில் அவகோடா விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாகவும், வேர் புழு தாக்கத்தின் காரணமாகவும் மரங்களில் மர்ம நோய் தாக்கி, முற்றிலுமாக அவகோடா விவசாயம் பாதிப்பு அடைந்து வருகிறது. இதனை நம்பி உள்ள விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருவதாக கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
மர்ம நோய் தாக்கி வரும் அவகோடா மரங்களை நோய் தாக்கத்தில் இருந்து தடுக்க, தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மரத்தில் ஒரு வருடத்திற்கு 1 முதல் 3 டன் வரை காய்கள் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.