"என் அம்மாவின் தியாகம்" - உருகிய பேரறிவாளன் - பேரறிவாளன் நெகிழ்ச்சி
பேரறிவாளன் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தங்களது இல்லத்தில் பேரறிவாளன் இன்று (மே. 18) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "என் அம்மாவின் தியாகம், அவரின் போராட்டம் தான் இதற்கு காரணம். நிறைய வேதனை, வலிகளை சந்தித்துள்ளார். இதற்கு காரணம் எங்கள் பக்கம் இருந்த உண்மை, நியாயம். மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலை நான் நான்கு முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும் அது ஒவ்வொரு உணர்வை தந்திருக்கிறது. ஒரு காலகட்டத்திற்கு பிறகுதான் அதனுடன் என் அம்மாவை நான் ஒப்பிட ஆரம்பித்தேன். இதனை நான் அம்மாவிடம் சொல்லியதில்லை. ஏனெனில், எங்களுக்குள்ளான இயல்பான உணர்வு போய்விடக் கூடாது என நினைத்தேன். இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST