ஜெர்மனியில் முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - ஹனோவர் மேயர் தோமஸ் ஹிரைன்
ஜெர்மன் நாட்டில் ஹன்னோவர் என்றும் இடத்தில் இந்தியா மற்றும் இலங்கை தமிழர்கள் சேர்ந்து ரீமுத்துமாரியம்மன் கோயில் கட்டியுள்ளனர். இதன் கும்பாபிஷேகம் நேற்று (மே.8) காலை நடைபெற்றது. மயிலாடுதுறை சிவபுரம் பாடசாலை நிறுவனர் ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் ஜெர்மன் ஶ்ரீகுமார் குருக்கள் மற்றும் இந்திய இலங்கை சிவாச்சாரியார்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினர். இந்த விழாவில் ஹனோவர் மேயர் தோமஸ் ஹிரைன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST