தமிழ்நாடு

tamil nadu

விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு உணவு பரிமாறிய இஸ்லாமியர்கள்

ETV Bharat / videos

மத நல்லிணக்கத்தை போற்றும் முயற்சி.. விநாயகர் ஊர்வலத்தில் இந்துகளுக்கு உணவு பரிமாறிய இஸ்லாமியர்கள்! - விநாயகர் சிலை ஊர்வலம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 1:13 PM IST

கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த பேரிகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரண்டு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், மனித நேயத்தை வளர்த்து அனைவரும் ஒன்றிணைந்து சகோதரர்களாக இருப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்கும் இந்து சமூக மக்களுக்கு அறுசுவை உணவு வழங்குவது வழக்கமாக உள்ளது. 

அதேபோல், இந்த ஆண்டும் இஸ்லாமியர்கள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து சமூக மக்களுக்கு உணவினை தயாரித்து பரிமாறினர். அதனைத்தொடர்ந்து திமுக ஒன்றியச் செயலாளர் நாகேஷ், கார்த்திக் ஆகியோரின் தலைமையில் பிரம்மாண்டமாக விநாயகர் சிலை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. 

அப்போது தப்பாட்டம், செண்டா மேளம் இசைத்து இளைஞர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர். அப்போது கதக்களி இசைக்கு கதக்களி நடிகர்கள், பச்சை, கத்தி, தாடி, கரி, மினுக்கு என ஐவகை வேஷத்தை அணிந்து கலை நயத்துடன் ஆடி சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பேரிகை கிராமம் முழுவதும் விழாக் கோலம் பூண்ட நிலையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details