Video: குதிரைப்படைகள் சூழப் பாரம்பரிய முறையில் அழைத்து வரப்பட்ட முர்மு! - ராம்நாத் கோவிந்த் முர்முவை வரவேற்று உடன் அழைத்து வந்தா
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திரெளபதி முர்மு பாரம்பரிய முறையில் குதிரைப்படைகள் அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முர்முவை வரவேற்று உடன் அழைத்து வந்தார். பின்னர் மண்டபத்திற்குள்ளே வந்ததும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் வரவேற்று அவரை உள்ளே அழைத்துச்சென்றனர். பிரதமர், ஆளுநர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் திரெளபதி முர்முவின் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST