வங்கி இரவு காவலாளி மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி! - CCTV videos
வேலூர்: குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டையில் கூட்டுறவு வங்கி ஒன்று பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சுமார் 30 ஆண்டுகளாக இரவு காவலாளியாக பாபு என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சுண்ணாம்பேட்டையைச் சேர்ந்த சோபன் பாபு என்பவர் மதுபோதையில் அந்த வழியாக சென்றுள்ளார்.
அப்போது காவலாளி பாபுவிடம், மது போதையில் வந்த சோபன் பாபு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை காவலாளி பாபு மீது ஊற்றி சோபன் பாபு நெருப்பு வைத்துள்ளார். இதனை உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவலாளி பாபு, அங்கு இருந்து எழுந்து ஓடினார். பின்னர் இது குறித்து குடியாத்தம் காவல் துறையினருக்கு பாபு தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த குடியாத்தம் காவல் துறையினர், மதுபோதையில் இருந்த சோபன் பாபுவை காவல் நிலையம் அழைத்து வந்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர், சோபன் பாபுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.