தமிழ்நாடு

tamil nadu

மக்களுக்கு இலவச உணவுகளை வழங்கிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்!

ETV Bharat / videos

தருமபுரியில் என்ஜிஓ சார்பில் இலவச உணவுகளை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! - My Dharmapuri free food

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 5:37 PM IST

தருமபுரி: 'மை தருமபுரி' அமைப்பு சார்பில் கரோனா பெருந்தொற்று காலத்தில், மக்களுக்கு நாள்தோறும் இலவச உணவு வழங்கி வந்தனர். 999 நாள் கடந்து, இன்று ஆயிரமாவது நாளை ஒட்டி, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த அமைப்பு, நாள்தோறும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 'பசிக்குதா வாங்க சாப்பிடுங்க' என்ற வாசகத்துடன் பொதுமக்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கி வருகின்றனர். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் உதவியாளர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள், பெண்கள் உள்ளிட்டோர் உணவை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மை தருமபுரி அமைப்பு போல இவர்களின் செயல்பாடு கேட்டு அறிந்து, கடலூர் மாவட்டத்தில் மை கடலூர், மை குறிஞ்சிப்பாடி என பொதுமக்களுக்கு பசியாற்றும் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். தான் தனது வீட்டில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளித்து வருவதாகவும் தெரிவித்தார். 

ABOUT THE AUTHOR

...view details