திருவண்ணாமலையில் 'மிஸ்டர் தமிழ்நாடு 2023' போட்டி! - Polur
திருவண்ணாமலை: போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இளைஞர்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தவும், அனைவருக்கும் உடற்பயிற்சியை மேம்படுத்தும் முயற்சியாக திருவண்ணாமலை மாவட்ட பாடி பில்டர் வெல்பர் சொசைட்டி அசோசியேசன் மற்றும் அர்னால்ட் பிட்னஸ் ஜிம் ஆகியவை இணைந்து 'மிஸ்டர் தமிழ்நாடு 2023' மாநில அளவிலான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, சென்னை, நெல்லை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இருந்து 180 ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர்.
இப்போட்டியில் 55, 60, 65, 70, 75, 80க்கு மேற்பட்ட உடல் எடை கொண்ட பிரிவுகளின் கீழ் தனித்தனியாக போட்டி நடைபெற்றது. ஆண் போட்டியாளருக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டு தங்களது திறமையை வெளிக்காட்டி போட்டியில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:திருவண்ணாமலையில் பாரம்பரிய உணவுத் திருவிழா - ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்!