காட்பாடியில் நடைபெற்ற மிஸ்டர் சௌத் இந்தியா 2023 ஆணழகன் போட்டி..! - தமிழ்நாடு பாடி பில்டர் நல சங்க செயலாளர்
Published : Nov 6, 2023, 12:40 PM IST
வேலூர்: காட்பாடியை அடுத்த செங்குட்டை பகுதியில் தமிழ்நாடு பாடி பில்டர் வெல்ஃபேர் மற்றும் லாரா பிட்னஸ் அன்ட் ஸ்னாப் பிட்னஸ் சார்பில் மிஸ்டர் சௌத் இந்தியா 2023 ஆணழகன் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 183 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஜூனியர், சீனியர், மாஸ்டர்ஸ், மென்ஸ் டிஜிட் என 55 கிலோ எடை முதல் 80 கிலோவிற்கு மேல் உள்ள 11 எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்கள் உடல் கட்டமைப்புகளை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு பாடி பில்டர் நல சங்க செயலாளர் நாகேஷ் பிரசாத் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கம், கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு ஆகியவற்றை வழங்கி பெருமைப்படுத்தினர்.