முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் ஆணழகன் போட்டி! - salem district news
சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை சேலம் வடக்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாட்டை சேலம் 60வது கோட்டம் இளைஞர் அணி அமைப்பாளர் அசோக்குமார் செய்திருந்தார். இந்த ஆணழகன் போட்டியில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து 200 ஆணழகன்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சீனியர் ஆண்கள் பிரிவு, ஜூனியர், சப் ஜூனியர் ஆண்கள் பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
இதில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாவது பரிசாக ரூ.3000, மூன்றாவது பரிசாக ரூ.2000 மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெறும் ஆணழகனுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆணழகன்களும் இசைக்கு ஏற்றவாறு விதவிதமாக தங்களது உடல் கட்டுகளை வெளிக்காட்டி அசத்தினர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களை உடனடியாக பிரிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும் காரணங்கள்?