தமிழ்நாடு

tamil nadu

தாட்கோ மூலம் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடனுதவி

By

Published : Jul 22, 2023, 6:55 PM IST

Etv Bharat

கோவை:கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் SC/ST தொழில்முனைவோருக்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடனுதவி வழங்கும் பணியை இன்று (ஜூலை 22) பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆனைமலை அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் தனியார் கல்யாண மண்டபத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு (Karunanidhi Centenary Celebration) விழாவை முன்னிட்டு குறு, சிறு நடுத்தர மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலுக்கு கடன் வழங்குவதற்கான முகாம் இன்று (ஜூலை 22) நடந்தது. இதனை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். 

பின்னர் இது குறித்து பேசிய அவர், 'கடந்த மாதம் முதலமைச்சர் அண்ணல் அம்பேத்கர் திட்டத்தை துவக்கி வைத்தார். கிராமப்புறங்களில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மாநில அரசு கொண்டு வந்த திட்டங்கள் ஏழைகளின் மக்களுக்கு சேரும் விதமாக அண்ணல் அம்பேத்கர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் மாவட்டத் தொழில் மையம் மூலம் 100% சதவீதம் ஏழை மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில் 65% கடனும் 35 சதவீதம் மானியமும் வட்டி ஆறு சதவீதமும் மானியத்துடன் வழங்கப்படுகிறது. தாட்கோ (TAHDCO - Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Ltd) மூலம் ஏழை மக்களுக்கு வழங்க வங்கி அதிகாரிகளுடன் நேரடியாக மக்களை சந்தித்து மாநிலத் திட்டங்கள் குறித்தும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்யவும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது' எனவும் அவர் தெரிவித்தார். 

கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தளபதி முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் தேவ.சேனாதிபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்க குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details