“சந்திரயானை அனுப்பியதன் மூலம் அறிவியல் புத்தி மேலே, சமூக புத்தி கீழே” - ஆ.ராசா காட்டம்! - திமுக அலோசனை கூட்டம்
Published : Nov 8, 2023, 12:05 PM IST
நீலகிரி:நீலகிரி மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் தனியார் மண்டபத்தில் நேற்று (நவ.7) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆ.ராசா பேசும்போது, வரும் மக்களவைத் தேர்தல் தேசத்தின் நலனிற்கான தேர்தல் என்றும், நாட்டைக் காப்பாற்றும் தேர்தல் என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், விஸ்வகர்மா திட்டம் என்பது குலக்கல்வியை ஊக்குவிக்க மத்திய அரசு கொண்டு வரும் திட்டம், தாழ்த்தப்பட்டவர்களை மேற்கொண்டு படிக்க விடாமல் 3 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து, அவர்களை முன்னேற விடாமல் தடுக்கும் செயல் என குற்றம் சாட்டினார்.
மேலும், சந்திரயானை விண்ணுக்கு அனுப்பியதன் மூலம் அறிவியல் புத்தி மேலே சென்றுள்ளதாகவும், அதேநேரத்தில் சமூக புத்தி கீழே சென்று விட்டது எனவும் கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுகவைச் சேர்ந்த நகர மன்றத் தலைவர்கள், நகரமன்றத் துணைத் தலைவர்கள், பேரூரட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.