நான்காவது மாடியிலிருந்து குழந்தையை தூக்கிப்போட்ட தாய்! - பெங்களூர்
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், ஒரு பெண் தனது மூளை வளர்ச்சி குன்றிய 5 வயது குழந்தையை நான்காவது மாடியிலிருந்து தூக்கிப்போட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அக்கம் பக்கத்தினர் தக்க சமயத்தில் அந்த பெண்ணை காப்பாற்றினர். எனினும் அந்த குழந்தை இறந்தது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும், குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தாய் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST