நீலகிரியில் நாய்கள் கண்காட்சி: 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்ற க்யூட் வீடியோ!
நீலகிரி:இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நேற்றுடன் (மே 28) முடிவடைந்தது. இந்த சூழலில் குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில் நீலகிரி கெனல் அசோஷியேசன், சார்பில் 3 மற்றும் 4-வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
குறிப்பாக பாெமெரியன், டால்மேஷன், ராஜபாளையம், கிரேடேன், ஹஸ்கி, பிகில் உள்ளிட்ட நாய்கள் போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தின. இந்த நாய்கள் கண்காட்சியில் நாய்களுக்கான கீழ்ப்படிதல், அழகு, மோப்ப சக்தி உள்ளிட்ட போட்டிகள் நடை பெற்றது.
போட்டியில் காவல்துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான நாய்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தின. இந்த ஆண்டு நாய்கள் கண்காட்சியில் வெவ்வேறு பிரிவுகளில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு சாம்பியன்ஷிப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:உதகை 63-ஆவது பழக் கண்காட்சியில் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு மரியாதை!