பழனியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பு-சிசிடிவி காட்சிகள் வைரல்! - palani news
திண்டுக்கல்:பழனியில் சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த முருகானந்தத்தின் மனைவி பாண்டிசெல்வி நேற்று (ஜூலை 31ஆம் தேதி) மதியம் 2 மணியளவில் புது தாராபுரம் சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு செல்லும் போது சாலையில் செல்போன் பேசியபடியே நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்று உள்ளனர். இதுகுறித்து பாண்டிசெல்வி பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வங்கிக்கு முன்புறம் பொருத்தி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த செல்போன் 12 ஆயிரம் மதிப்புடையதாகும் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.