பள்ளி வளாகத்தில் வளர்க்கப்படும் அதிசய வாழை மரம்.. ஆச்சரியத்துடன் கண்டு செல்லும் கிராமமக்கள்.. - Perambalur school campus
Published : Oct 5, 2023, 5:52 PM IST
பெரம்பலூர்: ஆலத்தூர் வட்டம் T.களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள தோட்டத்தில், நடுவில் குலை தள்ளிய நிலையில் இருக்கும் வாழை மரத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் T.களத்தூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது காய்கறி தோட்டம், பசுமையான மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் பசுமைப் பள்ளியாக விளங்குகிறது.
இதனிடையே, இந்த பள்ளி வளாகத்தில் வாழை மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதில் 7 அடி உயரமுள்ள கரி வாழை வகையைச் சேர்ந்த ஒரு வாழை மரமானது, 4 அடி உயரத்தில் மரத்தின் நடுப்பகுதியில் குலை தள்ளிய நிலையில் வாழைப்பூவோடு தற்போது வளர்ந்து வருகிறது.
வாழை மரத்தின் மேற்பகுதியில் தான் பொதுவாக வாழை குலை தள்ளிய நிலையில் காணப்படும். தற்போது
நடுவில் குலை தள்ளிய நிலையில் உள்ள இந்த அதிசய வாழை மரத்தினை மாணவ - மாணவிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.