அரசு பள்ளி மாணவர்களுடன் காலை உணவை சுவைத்த அமைச்சர் உதயநிதி! - காலை உணவு திட்டத்தை உதயநிதி ஆய்வு
சேலம்:தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் அருகில் உள்ள முல்லை நகர் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் இன்று (பிப்.16) முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான பொருட்களின் தரம் குறித்தும், உணவின் சுவை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் பள்ளிக் குழந்தைகளின் வருகை பதிவேடு குறித்தும், பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகள் தூய்மை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வின்போது மாணவ - மாணவியர் பாட்டு பாடி அசத்தினர்.