Erode by election: 'நீயே ஒளி... நீதான் வழி' - 'ஒர்க்கவுட்' செய்து வாக்கு சேகரித்த அமைச்சர் மஸ்தான் - ஈரோடு செய்திகள் இன்று
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 48-வது வார்டு பகுதியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அந்த பகுதியில் இருந்த உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடற்பயிற்சி செய்து அங்கு இருந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.