தமிழ்நாடு

tamil nadu

DIG Vijayakumar: டிஐஜி விஜயகுமார் உடலுக்கு அமைச்சர் உள்பட உயர் அதிகாரிகள் அஞ்சலி!

ETV Bharat / videos

DIG Vijayakumar: டிஐஜி விஜயகுமார் உடலுக்கு அமைச்சர் உள்பட உயர் அதிகாரிகள் அஞ்சலி! - கோவை சரக டிஐஜி

By

Published : Jul 7, 2023, 3:08 PM IST

கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயகுமார், இன்று காலை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை நிறைவடைந்தது. 

இதனிடையே, இது குறித்து முகாம் அலுவலகத்தில் காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கிற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்பட பல்வேறு காவல் துறை அதிகாரிகள் வந்தனர். 

பிரேத பரிசோதனை முடிந்த டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் உடலுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஏடிஜிபி அருண் உள்பட கோவை மாவட்ட காவல் அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு அரசு அமரர் ஊர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது.  

ABOUT THE AUTHOR

...view details