தமிழ்நாடு

tamil nadu

Tamil Nadu Health Minister Ma. Subramanian

ETV Bharat / videos

"H3N2 வைரஸ் குறித்து பதற்றம் வேண்டாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்! - அமைச்சர் மா சுப்பிரமணியன்

By

Published : Mar 11, 2023, 9:59 AM IST

ராணிப்பேட்டை:வாலஜாப்பேட்டை அடுத்த வள்ளுவம்பாக்கம் மற்றும் புன்னை ஆகிய இரு பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

அப்போது பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "தமிழகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களின் மூலமாக தமிழகம் முழுவதும் 12,80,000 பேர் பயன் பெற்றுள்ளதாக கூறினார். மேலும், கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் இன்புளூயன்சா (H3N2) வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாகவும், இதனால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு ஏற்படுவதாகவும் கூறிய அவர், சுமார் 4 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் வைரஸ் தொற்றில் இருந்து குணம் பெறலாம் என்றார். மேலும் இன்புளுயன்சா வைரஸ் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம்" என்று அமைச்சார் தெரிவித்தார். 

தொடர்ந்து, "இன்புளூயன்சா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில் தனித்து இருப்பதன் மூலம் வைரஸ் பரவலை தடுக்கலாம் எனவும் H3N2 வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் 1000 இடங்களில் நடைபெற்றதாக தெரிவித்தார். இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறையும் வரை இந்த காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் பொதுமக்கள் இதன் மூலம் பயன்பெறலாம்" என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 8 மாதங்களுக்கு பிறகு முதல் கரோனா உயிரிழப்பு - பரவல் அதிகரிக்கிறதா?  

ABOUT THE AUTHOR

...view details