தமிழ்நாடு

tamil nadu

திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம்

ETV Bharat / videos

"திராவிட மாடல் ஆட்சியையும், ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது.. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் உள்ளது" - அமைச்சர் எ.வ.வேலு! - dindigul

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 9:18 PM IST

திண்டுக்கல்:முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 106 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழனி - தாராபுரம் இருவழிச் சாலையை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியை பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் துவக்கி வைத்தனர். 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, "பெண்களைப் படி படி என்று சொன்ன இயக்கம் தான் திராவிட இயக்கம். பெண்களைப் படிக்க வற்புறுத்திய மும்மூர்த்திகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர். 

அந்த மும்மூர்த்திகளின் வடிவில் இருக்கின்ற தற்போதைய முதலமைச்சரின் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில், புதுமைப் பெண் திட்டத்தை உருவாக்கி உயர்க் கல்வி பயில்கிற பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது. 

திராவிட மாடல் ஆட்சியையும், ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது" என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details