திருப்பத்தூரில் சிறுதானிய உணவு திருவிழா கோலாகலம்.. 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் செய்து அசத்தல்.. - மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
Published : Dec 15, 2023, 7:45 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், திருப்பத்தூர் மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023யை முன்னிட்டு இன்று (டிச.15) சிறுதானிய உணவு திருவிழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறுதானிய உணவு திருவிழாவில் பல்வேறு வகையான சிறுதானியங்களைக் கொண்டு உணவுகள் தயாரித்து பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் கேழ்வரகு, சாமை, தினை, சோளம், கம்பு, அரிசி, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த திருவிழா நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன், மாவட்ட சேர்மன் சூரியகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, அரசு அதிகாரிகள், பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.