ஒடிசா டூ ஓசூருக்கு கஞ்சா கடத்தல்.. 14 கிலோவுடன் பலே இளைஞர் சிக்கியது எப்படி? - Katpadi station
வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்திற்கு ஹௌராவில் இருந்து யெஷ்வந்த்பூர் செல்லும் பயணிகள் விரைவு ரயில் வந்தது. காட்பாடி ரயில்வே இருப்பு பாதையில் காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் பயணிகளிடம் வழக்கம் போல் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையின் போது பொதுப்பெட்டியின் சீட்டுக்கு அடியில் 9 பண்டல்களில் இருந்து. அந்த பண்டல்களை பிரித்து பார்த்த போது, அதில் 14 கிலோ கஞ்சா இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
அதன் பின்னர், கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபிஷெக் குடேய் (23) என்பவரையும் கைது செய்தனர். கைதான ஒடிசா மாநில இளைஞர் தான் வேலை செய்யும் ஓசூருக்கு தனது சொந்த ஊரில் இருந்து கஞ்சா கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரை வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் ஒப்படைத்தனர்.