தமிழ்நாடு

tamil nadu

மைக் செட் இசைப்போட்டி

ETV Bharat / videos

யாரு சத்தம் பெருசுனு போட்டு காட்டு..! விநோதமான மைக் செட் இசைப்போட்டி!

By

Published : Aug 2, 2023, 8:03 PM IST

தேனி: கம்பம் நகரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மைக் செட் உரிமையாளர்கள் சார்பில் இசைப்போட்டி திருவிழா நடைபெற்றது. இந்தப் போட்டியில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த இசைப்போட்டி திருவிழாவில் கலந்து கொண்டு, மைக் செட்டுகளை திறந்தவெளியில் அமைத்து பாடல்களை ஒலிபரப்பினர்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மைக்செட் உரிமையாளரின் பெயர் எழுதப்பட்டு குலுக்கல் முறையில் எதிர் போட்டியாளர் தேர்வு செய்யப்படுவர். மலை அடிவாரப் பகுதியில் இரு போட்டியாளர்கள் தங்களது மைக் செட்டை கம்பத்தில் கட்டி, பழைய பாடல்களை ஒரே நேரத்தில் ஒலிக்கச் செய்வார்கள்.

ஒலிபெருக்கி கட்டியிருக்கும் தூரத்தில் இருந்து மிக அதிகமான இடைவெளியில் நடுவர் மேடை அமைக்கப்பட்டிருக்கும். இருவரும் ஒரே நேரத்தில் பாடலை இசைக்க செய்யும்பொழுது, நடுவர் மேடைக்கு எந்தப் பாடல் துல்லியமாக கேட்கின்றதோ அந்த நபருக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். தோல்வியுற்ற போட்டியாளர்கள் களத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்.

முதல் சுற்றில் வெற்றி பெற்ற போட்டியாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு 2-வது சுற்று  நடத்தப்படுகிறது. 2-வது சுற்றிலும் வெற்றி பெறும் நபர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதேபோல அடுத்தடுத்து சுற்றில் வெற்றி பெற்று இறுதியாக இருக்கும் முதல் மூன்று மைக் செட் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.

மேலும் இந்தப் போட்டியில் தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் மைக் செட் உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details