தமிழ்நாடு

tamil nadu

பெண்மையின் பெருமைகளை மூச்சு விடாமல் பேசிய அரசு பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி

ETV Bharat / videos

பெண்மையின் பெருமைகளை மூச்சு விடாமல் பேசி சிறுமி.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மாவட்ட ஆட்சியர்! - தமிழ் பேச்சு போட்டி

By

Published : Jun 20, 2023, 8:29 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று குத்தாலம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அவ்வகையில் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அவர் ஆய்வு செய்தார்.

அப்போது மாநில அளவிலான பேச்சுப் போட்டிக்குத் தயாராகிய அப்பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவி சிவஸ்ரீ என்பவர் சிறப்பாகப் பேசுவதாகப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இதைத்தொடர்ந்து மேடையில் பேசிக் காட்டிய பெண்மையின் பெருமைகள் குறித்த கருத்தினை அம்மாணவி மாவட்ட ஆட்சியர் முன்பு பேசிக்காட்டச் சொன்னார்.

சிறிதும் தயக்கமோ தடங்கலோ இல்லாமல் கேட்பவர்களுக்கே மூச்சு முட்டும் அளவுக்குப் பெண்மையின் பெருமைகளை மூச்சு விடாமல் சரளமாகப் பேசிக் காட்டினார். மாணவியின் பேச்சில் அசந்து போன மாவட்ட ஆட்சியர் அந்த மாணவிக்குச் சால்வை அளித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அந்த மாணவிக்குத் தமிழ் பயிற்றுவித்த தமிழாசிரியை சந்திராவுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: நேற்று சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் விருது; இன்று சைபர் கிரைம் போலீசாரால் கைது

ABOUT THE AUTHOR

...view details