பழனி மலைக்கோயில் ரோப்கார் அருகில் பயங்கர தீ விபத்து!
திண்டுக்கல்: பழனி மலைக்கோயில் ரோப்கார் அருகில் கொடைக்கானல் சாலையில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் எதிர்பாராத விதமாகத் தீப்பற்றி மளமளவென எரியத் துவங்கியது.
அந்தக் கடையில் பழைய பேப்பர் பிளாஸ்டிக், இரும்பு, கெமிக்கல், ஆயில், பழைய டிவி, மரப்பொருட்கள் போன்ற பொருட்கள் உள்ளதால் மிகவும் எளிமையாகக் கடை முழுவதும் எளிதில் தீப்பற்றி மளமளவென எரிய துவங்கியது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இந்தக் கடை ஒட்டி எந்த கடைகளும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் பத்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
மேலும் கடையிலிருந்த பழைய எலக்ட்ரிக் பொருட்கள் தீ விபத்தால் வெடித்துச் சிதறியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பழனி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனி கோயில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. பக்தர்கள் கடும் அவதி!