Video:ஒட்டுமொத்த தெலங்கானாவில் ஒலித்த தேசிய கீதம் - பொதுமக்கள் உற்சாகம் - அசாதுதீன் ஓவைசி
76-வது சுதந்திர தினத்தையொட்டி தெலுங்கானா மாநிலம் முழுவதும் நேற்று காலை 11.30 மணிக்கு தேசிய கீதம் பாடப்பட்டது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள்,பொது இடங்கள் என்று ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடப்படட்து. இதனையடுத்து முக்கிய இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள அபிட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். .தெலுங்கானா முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடப்பட்டதாகவும், இதில் சுமார் 28 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
பொதுமக்கள் உற்சாகம்