masi magam: மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி.. விழாக்கோலம் பூண்ட கும்பகோணம்!
தஞ்சாவூர்:திரும்பும் இடமெல்லாம் கோயில்களைக் கொண்ட ஊர் கும்பகோணத்தில் மாசி மகம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆண்டு தோறும் 10 நாள்கள் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெறும் இந்த விழா, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அன்று ஆறு சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து தினந்தோறும் காலை, மாலை இருவேளையும் சாமி வீதி உலா வந்தது. இந்நிலையில் இன்று மாசி மகம் பெருவிழாவை முன்னிட்டு, பிற்பகல் 12 மணி அளவில் சிவாலயங்களிலிருந்து ரிஷப வாகனத்தில் உற்சவமூர்த்திகள் மகாமகம் குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெற்ற உள்ளது. இதனைக் காண்பதற்காக அதிகாலை முதலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமகம் திருக்குளத்தில் குவிந்து புனித நீராடி வருகின்றனர்.
மாசி மகாமகம் பெரு விழாவை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற கும்பகோணம் மகாமகம் திருக்குளத்தில், இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்குத் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். மேலும் அருகே உள்ள காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர் உள்ளிட்ட பல கோயில்களில் சுவாமி தரிசனமும் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வெகுவிமரிசையாக நடைபெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மாசிமகத் தேரோட்டம்!