மாசி மகம் பெருவிழா
வீடியோ: காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மகம் பெருவிழா தொடங்கியது - தென்காசி
தென்காசி:தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் மாசி மகம் பெருவிழா இன்று (பிப். 25) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், பால், மஞ்சள், திரவியம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.