’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 40 ஆண்டு கால முயற்சி - இயக்குநர் மணிரத்னம் - MANIRATNAM SPEECH
பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசும் போது, “நான் கல்லூரி படிக்கும்போது இந்த புத்தகம் படித்தேன். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. கல்கிக்கு முதல் நன்றி. இப்படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடிக்க வேண்டியது. ஆனால், முடியாமல் போனதற்கான காரணம் இன்று புரிந்தது. எங்களுக்காக விட்டு சென்றிருக்கிறார். எவ்வளவு பேர் முயற்சித்திருக்கிறார்கள். நானும் 3 முறை 1980களில் இருந்து முயற்சி செய்து இன்று தான் முடித்திருக்கிறேன்” என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST