விளையாடிக் கொண்டு இருந்த போது மாரடைப்பு... சுருண்டு விழுந்து இறந்த பரிதாபம்! - ஹார்ட் அட்டாக்
தெலங்கானா :இறகுப் பந்து விளையாடிக் கொண்டு இருந்த நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், ஜக்டியால் பகுதியைச் சேர்ந்தவர் புஸா ராஜவெங்கட கங்காராம். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து இறகுப் பந்து விளையாடி உள்ளார். உடல் அயர்வு ஏற்பட்ட நிலையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. வலி தாங்க முடியாமல் தவித்த கங்காராம், சுருண்டு விழுந்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பதறியபடி ஓடி வந்து கங்காராமை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சி.பி.ஆர் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் கங்காராம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இறகுப் பந்து விளையாடிக் கொண்டு இருந்தவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கங்காராமுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.