ரயில் நிலைய கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்! போதை ஆசாமியால் பரபரப்பு! - ஈரோடு சந்திப்பு ரயில் நிலையம்
Published : Jan 18, 2024, 10:51 PM IST
ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள 100 அடி உயரக் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறிய மது போதை ஆசாமி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள நூறு அடி உயரமுள்ள உயர் கண்காணிப்பு கோபுரத்தின் மீது மது போதையில் ஒரு நபர் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறிய நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரை பத்திரமாகக் கீழே இறக்கினர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் காவிரி ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பதும், போலீசார் துன்புறுத்தியதால் வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ள மிரட்டியதும் தெரியவந்தது.
இதனையடுத்து செல்வத்தை ரயில்வே போலீசார் அழைத்துச் சென்றனர். செல்வம் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதே இடத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வடமாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.