தமிழ்நாடு

tamil nadu

பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat / videos

நூல் இழையில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு - ஓட்டுநரின் Presence of Mind-ஆல் தப்பிய உயிர்கள் - accdent near coimbatore

By

Published : Jul 25, 2023, 11:00 PM IST

கோவை:தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில் முருகன், திருநெல்வேலியில் இருந்து கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்துக்கு நிலக்கரி லோடு ஏற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று காலை கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, கிட்டாம்பாளையம் நால்ரோடு அருகே லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

அப்போது கருமத்தம்பட்டி நோக்கி செல்ல எதிர்ப்புறமாக திரும்பிய தனியார் பள்ளி பேருந்தின் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் லாரியை வலது புறமாக திருப்பியுள்ளார். வலது புறம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புவளையங்களில் மோதிய லாரி, அங்கிருந்த பேருந்து நிழற்குடை மீது மோதி நின்றது. 

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எதிர்ப்புறம் வந்த தனியார் பள்ளி பேருந்து, கார் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஆட்டோ விபத்திலிருந்து தப்பியது. லாரி ஓட்டுநரின் துரிதமான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஏற்கனவே இந்தப் பகுதியில் கல்லூரி பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதி இருவர் உயிரிழந்ததை அடுத்து சாலையின் இருபுறமும் பேரிகாட்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும் இப்பகுதியில் சாலை விபத்துகள் நடப்பது தொடர்கதையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details