விழுப்புரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் - திரளான மக்கள் பங்கேற்பு! - Valudhareddy 32 ward
விழுப்புரம்: வழுதரெட்டி 32-வது வார்டில் உள்ள மயானத்தில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இன்று காலை 6 மணியளவில் பூர்ணாஹூதி, மஹாதீபாராதனை, அஷ்டபந்தனம் சாத்துதல் மற்றும் சுவாமிகள் பிரதிஷ்டை செய்து கோ பூஜை, வேதிகா பூஜை, நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் சுமங்கலி பூஜை, சுபன்யா பூஜை, விசேஷ திரவ்யாஹூதிகள் மற்றும் சகல விதமான ஹோமங்கள், சங்கீத உபசாரம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து ஆலய மகா கும்பாபிஷேகம் காலை 9:30 மணி அளவில் நடைபெற்றது. 32-வது வார்டு வழுதரெட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.