மதுரையின் அரசி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் : 2 டன் வண்ண மலர்களால் மேடை அலங்காரம்! - மதுரையின் அரசி மீனாட்சிக்கு திருக்கல்யாணம்
மதுரை: சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரையின் அரசி மீனாட்சிக்கும் - சுந்தரேஸ்வரருக்குமான திருக்கல்யாணம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக பக்தர்கள் முன்னிலையில் இன்று காலை 10.35 மணிக்கு நடைபெறுகிறது. திருக்கல்யாணத்திற்கு முன்னதாக மீனாட்சியும் - சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு சித்திரை விதிகளில் வலம் வந்து, முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி பின் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவர். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவர். அதனைத் தொடர்ந்து, காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். 2 டன் வண்ண மலர்களால் திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST