வெகு விமர்சையாக நடைபெற்ற ஏழூர் முத்தாலம்மன் சப்பரத் திருவிழா...! - temple Festival
மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் கோயில் சப்பரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு T.கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, காடனேரி, கிளாங்குளம், சத்திரப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஆறு சப்பரங்கள் கொண்டு வந்து, முத்தாலம்மனை அம்மாபட்டியிலிருந்து அவரவர் ஊருக்கு அழைத்துச் சென்று வழிபடுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா என்பதால் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST