தமிழ்நாடு

tamil nadu

மாடு மாலை தாண்டும் திருவிழா

ETV Bharat / videos

பாறப்பட்டியில் களைகட்டிய மாடு மாலை தாண்டும் திருவிழா! - பாறைப்பட்டி திண்டுக்கல்

By

Published : Jun 9, 2023, 2:05 PM IST

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள பாறைப்பட்டியில் முத்தாலம்மன், பகவதியம்மன், காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்கள் உள்ளது. இந்த நிலையில், இந்த கோயிலின் திருவிழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோலாகலமாகத் தொடங்கியது. 

அதனைத்தொடர்ந்து சாமிக்கு தினமும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. மேலும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 8) மாலை தொடங்கியது. இதனையடுத்து திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 11 மந்தைகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர், மாடுகளை 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணைப்பட்டி ஊர் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அனைத்து மாடுகளையும் அவிழ்த்து விட்டனர். பின்னர் மாடுகள் எல்லை கோட்டை நோக்கி சீறிப் பாய்ந்தது. அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.  

இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் மந்தை நடுப்பள்ளம் மாடு முதலாவதாக ஓடி வந்து எல்லைக்கோட்டைத் தாண்டியது. பின்னர், வெற்றி பெற்ற மாடுக்கு ஊர் வழக்கப்படி 3 கன்னிப் பெண்கள் மஞ்சள் நீரை தெளித்து, எலுமிச்சம் பழத்தை வெற்றி பரிசாகவும் வழங்கினர்.  

அதனையடுத்து மஞ்சள் தெளித்த 3 கன்னிப் பெண்களும் எல்லைக்கோட்டில் இருந்து தாரை தப்பட்டையுடன் கோயிலுக்கு அழைத்து வந்தனர். இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details