8 கி.மீ தூரம் நடந்து சென்று ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் - எதற்காக தெரியுமா? - காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் இயேசு பாதம்
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்னும் நோக்கில் பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செய்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடத்தை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலிருந்து நடைபயிற்சி தொடங்கி, 8 கிலோ மீட்டர் நடந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சாலை தடங்க மேம்பாலம் வழியாக சென்று, மீண்டும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தின் முன்பு நடைபயிற்சியை நிறைவு செய்தார்.
மேலும், அமைச்சருடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் இயேசு பாதம், மாவட்ட வருவாய் அலுவலர், தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் வாக்கஸ் கிளப் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.