கண்களை கட்டிக்கொண்டு பியானோ வாசித்த லிடியன் - கைதட்டி உற்சாகமடைந்த வெளிநாட்டவர் - கைதட்டி உற்சாகமடைந்த வெளிநாட்டவர்
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று(ஜூலை 28) நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பியானோ கலைஞரான லிடியன் நாதஸ்வரத்தின் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இதில் கண்களைக் கட்டிக்கொண்டு லிடியன் வித்தியாசமாக பியானோ வாசித்தார். இதனைக் கண்ட வெளிநாட்டவர் ஒருவர் லிடியனின் இசையால் உற்சாகமடைந்து கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST