தமிழ்நாடு

tamil nadu

தேனியில் லாரி கார் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி 3 பேர் படுகாயம்

ETV Bharat / videos

தேனியில் லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்! - Assistant Professors accident

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 11:17 AM IST

தேனி:சென்னை தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக வேலை பார்த்து வரும் தருமபுரியைச் சேர்ந்த சிவநாதன் (42), மதுரையைச் சேர்ந்த பாலாஜியின் மனைவியான நிஷா (36) மற்றும் அவரது மகன்கள் அரவிந்த் (19), ஜெயசுதன் (12) ஆகிய நான்கு பேரும் ஒரே காரில் சென்னையில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள துர்க்கை அம்மன் கோயிலுக்கு அருகே, கம்பம் பகுதியிலிருந்து சின்னமனூர் சென்ற டிப்பர் லாரி மீது, கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காரை ஓட்டி வந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதில் சிவநாதன், நிஷா மற்றும் ஜெயசுதன் ஆகியோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், அவர்களை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்துள்ளார். முதலுதவிக்குப் பின்னர், அவர்கள் தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் உயிரிழந்த அரவிந்த்-இன் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சின்னமனூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details